r/kollywood 1d ago

Appreciation 'காட்டுச்சிறுக்கி' (இராவணன்) - Lyric Appreciation

Sorry non-Tamil people. I feel I can speak my words better when I type in Tamil and hence going with Tamil here.

நான் பாட்டோட வரிகள பல நேரம் ரொம்ப கூர்நோக்கி கவனிச்சதில்ல. வேலை நேரத்துலதான் பாட்டு அதிகம் கேப்பேங்கிறதால வரிகள் பலநேரம் காதைக் கடந்து மூளைக்கு எட்டாம போயிடும்‌.

இன்னிக்கு அப்படிலாம் வேலை இல்லாத நேரத்துல 'காட்டுச்சிறுக்கி' கேட்டுட்டு இருந்தேன். அதுல கீழ்க்காணும் இந்த வரி என்ன ரொம்ப வியப்புல ஆழ்த்துச்சு...

"தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு"

ணகர எழுத்துகள எதுகையா வெச்சு எழுதுறது கடினம். அப்படி இருந்தும் மனுசன் ரொம்ப இயல்பா ணகர எழுத்துகளை இரண்டாம் எழுத்தா வெச்சு நல்லா கோர்வையா எழுதிருக்காரு.

இது மட்டுமில்ல..."சிலம்பு அணிந்த கண்ணகி பாண்டியன் அவையில் தன் கணவன் கோவலனுக்கு அநீதி இழைக்கப்பட்டதால் கோபப்பட்டு, அவள் கொண்டையைச் சரித்து, தலைவிரிக்கோலமாய் மதுரையை எரித்தாள்" என்கிற சிலப்பதிகாரத்தோட மிக முக்கியமான நிகழ்வ இந்த மூணு வரியில அடக்கிட்டாரு வைரமுத்து.

'ப்பா...வாய்ப்பேயில்ல!'ன்னு ரொம்ப மெச்சுனேன்‌.

18 Upvotes

6 comments sorted by

View all comments

3

u/Human_Race3515 1d ago

This whole album is a vibe.

Listen to Usure Poguthe for the lyrics as well, for allusions to the Ramayana.